வவுனியா மணிபுரம் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சிஅம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் – 2019

வவுனியா மணிபுரம் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சிஅம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் – 2019

வவுனியா மரக்காரம்பளை வீதி மணிபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் நிகழும் மங்களகரமான விகாரி வருடம் ஆவணித்திங்கள் 10ம் நாள் (27.08.2019) செவ்வாய்க்கிழமை கொடியேற்றதுடன் அலங்கார உற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்து 09 தினங்கள் காலை அபிஷேகம் இடம்பெற்று மாலை வசந்தமண்டப பூசை இடம்பெறவுள்ளது.

10ம் திருவிழா (05.09.2019) வியாழக்கிழமை சப்தமி திதியும் விசாக நட்சத்திரம் சித்த யோகமும் கூடிய சுபவேளையில் காலை 10.00 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்பாளுக்கு அஷ்டோத்திர (108) சங்காபிஷேகமும் இடம்பெறவுள்ளதுடன் திருவிழா சிறப்புற நிறைவுறவுள்ளது.

எனவே அடியவர்கள் அனைவரும் ஆலயத்திற்கு வருகை தந்து இறையருள் பெற்றுய்யுமாறு ஆலய பரிபாலன சபையினரும் விழா உபயகாரர்களும் அன்புடன் அழைக்கின்றனர்.

தகவல் – இராசலிங்கம் யோகராசா